டெல்லியில் பா.ஜ.க. முதல்-மந்திரிகள் கூட்டம்; யோகி ஆதித்யநாத், புஷ்கர் சிங் தமி வருகை
டெல்லியில் பா.ஜ.க. தலைமையகத்தில் கட்சியின் முதல்-மந்திரிகள் பங்கு பெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள யோகி ஆதித்யநாத், புஷ்கர் சிங் தமி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் கட்சியின் முதல்-மந்திரிகள் மற்றும் துணை முதல்-மந்திரிகள் பங்கு பெறும் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி, அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, குஜராத் முதல்-மந்திரி பூபேந்திரா பட்டேல் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவும் வருகை தந்துள்ளார். இதேபோன்று பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் துணை முதல்-மந்திரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் நல்லாட்சி கொள்கை பற்றி பேசப்படும் என்றும் மற்றும் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த திட்டங்கள் அடங்கிய அறிக்கையை அவர்கள் சமர்ப்பிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
2024ம் ஆண்டு வரவிருக்கிற மக்களவை தேர்தலை கவனத்தில் கொண்டு இந்த கூட்டம் நடத்தப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது. பிற மந்திரிகள் நண்பகலில் வர கூடிய சூழலில், கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக 2021 டிசம்பரில் வாரணாசியில் இந்த கூட்டம் நடைபெற்றது.