மோடி ஆட்சியில் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு: மல்லிகார்ஜுன கார்கே

மோடி ஆட்சியில் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரித்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-17 22:59 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மன்ற வருடாந்திர கூட்டத்தில் ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு அறிக்ைக தாக்கல் செய்தது. அதில், இந்தியாவின் 40 சதவீத சொத்துகள், ஒரு சதவீத பெரும் பணக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.இதை சுட்டிக்காட்டி மத்திய அரசை காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் 40 சதவீத சொத்துகள், வெறும் 1 சதவீத பணக்காரர்களிடம் உள்ளன. அதே சமயத்தில், 50 சதவீத இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக நாட்டின் 3 சதவீத சொத்துகளைத்தான் வைத்துள்ளனர். மோடி ஆட்சியில் ஏழை-பணக்காரர் இடையிலான இடைவெளி அதிகரித்து விட்டது. சாமானியர்கள் தொடர்ந்து பள்ளத்திலேயே இருக்கிறார்கள். இந்திய ஒற்றுைம பயணம், பொருளாதார ஏற்றத்தாழ்வை நிரப்பக்கூடிய இயக்கம் என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 20 கோடி இந்தியர்களை வறுமையின் பிடியில் இருந்து விடுவித்தது. ஆனால், மோடி அரசு, மறுபடியும் அவர்களை வறுமையின் பிடியில் தள்ளி இருக்கிறது. மக்களின் வறுமையை அதிகரித்து விட்டது. மோடி அரசின் இத்தகைய கொள்கைகளை எதிர்க்கும் மக்களின் குரலாக இந்திய ஒற்றுமை நடைபயணம் திகழ்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்