கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகரிப்பு; 7 பேர் கொண்ட மத்திய நிபுணர் குழு ஆய்வு

கேரளாவில் பறவை காய்ச்சல் பற்றி ஆய்வு செய்ய மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை அனுப்பி வைக்க இருக்கிறது.

Update: 2022-10-27 17:44 GMT



புதுடெல்லி,


கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து, மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை கேரளாவுக்கு அனுப்பி வைக்க இருக்கிறது.

இதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பில் 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அந்த குழு பறவை காய்ச்சல் பரவல் பற்றி விரிவாக ஆய்வு செய்து, பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிக்கும் என தெரிவித்து உள்ளது.

இந்த குழுவில் என்.சி.டி.சி., எய்ம்ஸ் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் உள்ளிட்ட அமைப்புகளின் நிபுணர்கள் இடம் பெறுகின்றனர்.

கேரளாவில் பொது சுகாதார நடைமுறைகள், மேலாண் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பறவை காய்ச்சல் பரவலை எதிர்கொள்வதற்கான ஒழுங்குமுறைகள் உள்ளிட்ட விசயங்களில் மாநில சுகாதார துறைக்கு உதவியாக இந்த குழு செயல்படும்.

Tags:    

மேலும் செய்திகள்