'இது தான் அதிர்ஷ்டம்' ஒரே விபத்தில் இருமுறை உயிர் பிழைத்த வாகன ஓட்டி; காரணம் ஹெல்மெட் - வீடியோ
கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. பின்னர், சாலையையின் மத்தியில் இருந்த மின் விளக்கு கம்பமும் கிழே விழுந்தது.
புதுடெல்லி,
விபத்தில் பைக் ஓட்டி வந்த நபர் 2 முறை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைந்த திகிலூட்டும் வீடியோ ஒன்றை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.
சாலை விழிப்புணர்வு மற்றும் ஹெல்மெட் அணிவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'ஹெல்மெட் அணிபவர்களை கடவுள் காப்பாற்றுவார்' என்று பதிவிட்டு டெல்லி போலீசார் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், சாலையில் ஓரத்தில் இருந்து ஒரு கார் சாலையின் மறுபுறம் செல்ல முயற்சிக்கிறது. அப்போது, அந்த சாலையில் வேகமாக வந்த பைக் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. வேகமாக வந்து விபத்துக்குள்ளானதில் பைக்கை ஓட்டி வந்த நபர் சாலையில் இழுத்துக்கொண்டு சென்று விழுந்தார். இந்த பயங்கர விபத்தில் பைக் சாலையின் அருகே இருந்த மின்கம்பத்தில் மோதியது. பைக்கை ஓட்டி வந்த நபர் ஹெல்மெட் அணிந்திருந்தார். இதன் காரணமாக தலையில் அடிபடமாமல் உயிர் தப்பினர்.
பைக்கில் இருந்து தூக்கி வீடப்பட்ட பின்னர் சாலையில் அந்த நபர் எழுந்தார். அப்போது, பைக் மோதியதில் சாலை மத்தியில் இருந்த மின் விளக்கு கம்பம் சரிந்து நேராக பைக் ஓட்டி வந்த நபரின் தலை மீதே விழுந்தது. ஆனால், அந்த நபர் அப்போதும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் மின் விளக்கு கம்பம் விழுந்ததில் அவருக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த விபத்து அருகே பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஹெல்மெட் அணிந்திருந்ததால் ஒரே விபத்தில் பைக்கை ஓட்டி வந்த நபர் இரண்டு முறை உயிர்பிழைந்த அதிர்ஷ்ட சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.