கற்கை நன்றே...கற்கை நன்றே...பிச்சை புகினும் கற்கை நன்றே....ஒற்றை காலுடன் 2 கி.மீ குதித்து பள்ளிக்கு செல்லும் மாணவி...!

பீகாரில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர், ஒற்றை காலிலேயே 2 கிமீ தூரத்தில் உள்ள பள்ளிக்கு தினமும் சென்று படித்து வருகிறார்.

Update: 2022-06-30 10:13 GMT

பாட்னா,

பீகார் மாநிலம் சிவான் பகுதியை சேர்ந்த மாணவி பிரியன்சு குமாரி. இவருக்கு பிறவியிலேயே இடது காலில் குறை இருந்தது.

பெற்றோரின் ஊக்கத்தால், ஒற்றை காலிலேயே துள்ளித்துள்ளி குதித்தபடியே நடக்க பழகினார். 11 வயதான பிரியன்சு குமாரிக்கு, டாக்டராகி சேவை செய்வதே லட்சியம் என்கிறார். தனது உடற்குறையை போக்க பீகார் மாநில அரசும், மத்திய அரசும் உதவாததால், தினமும் 2 கிமீ தூரத்தை ஒற்றை காலிலேயே கடந்து பள்ளி சென்று வருகிறார். இதைத்தொடர்ந்து தனக்கு செயற்கைக்கால் வழங்குமாறு மாநில அரசிடம் பிரியன்சு குமாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

பிறந்ததில் இருந்தே இப்படித்தான் இருக்கிறேன். அதற்காக என் கனவுகளை அடையாமல் விடமாட்டேன். என் கனவை நோக்கி நான் செல்ல, எனக்கு செயற்கை கால் தேவைப்படுகின்றது. அதற்கு அரசு உதவ வேண்டும்' என்றார்.

இதன் மூலம் அரசு உதவிக்கரம் நீட்டுமா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்