பீகார்: அரசு காப்பகத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - நிர்வாகி கைது

3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அரசு காப்பத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-08-29 00:22 GMT

பாட்னா,

பீகாரின் முசாபர்பூரில் இயங்கி வந்த அரசு காப்பகத்தில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைப்போல மீண்டும் ஒரு சம்பவம் அங்கு தற்போது அரங்கேறி உள்ளது. அதாவது, மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள அரசு காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த 3 சிறுமிகள், காப்பக சூப்பிரணடு தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதில் 3 சிறுமிகள் வாக்குமூலம் அளித்ததுடன், மேலும் சில சிறுமிகள் சூப்பிரண்டு தங்களை அடிக்கடி தாக்குவதாக கூறியிருந்தனர். இதைத்தொடர்ந்து காப்பக சூப்பிரண்டை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பாலியல் வன்கொடுமை புகாரில் காப்பக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்