கடன் தொல்லை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாட்னா
பீகாரில் கடன் தொல்லையால் பழ வியாபாரி ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் விஜய் பஜாரில் பழ வியாபாரம் செய்து வந்தவர் கேதார் லால் குப்தா இவர் தனியாரிடம் 10 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி இருந்தார். கடனை கொடுத்தவர் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு தொடர்ந்து தொந்தரவு செய்து உள்ளார். கடன் கொடுத்தவரின் இந்த தொடர்ச்சியான பிரச்சினையால் மனமுடைந்த கேதார் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டார்
விஷம் குடிப்பதற்கு முன்பு கேதாரின் மகன் இளவரசன் அதனை வீடியோ எடுத்து உள்ளார்.அந்த வீடியோவில், "மார்க்கெட்டில் உள்ள சிலரிடம் அப்பா பணம் கடன் வாங்கி இருந்தார். அவர்கள் அதை வசூலிக்க தொடர்ந்து தொந்தரவு செய்தார்கள், எல்லா பிரச்சனையிலும் இருந்து விடுபட விஷம் குடித்துவிட்டோம்" என்று தெர்வித்து உள்ளார்.