வெளியூரில் கணவர்...! கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்த மனைவி...! திருமணம் செய்து வைத்த ஊர் மக்கள்

வெளியூரில் கணவர்...! கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்த மனைவி...! திருமணம் செய்து வைத்த ஊர் மக்கள் பரிதவிக்கும் குழந்தைகள்

Update: 2022-06-02 10:00 GMT

பாட்னா

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் ஷிக்கர்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் சுகவுலி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுசீலா தேவி. கல்யாணமாகி 3 குழந்தைகள் உள்ளார்கள். சுசீலா கணவர் மும்பையில் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். வேறு மாநிலத்தில் வேலை பார்த்து வருவதால், சொந்த ஊருக்கு எப்போதாவதுதான் செல்வார். தன் குடும்பத்திற்காக, அங்கேயே தங்கி உழைத்து கொண்டிருக்கிறார்.

சுசீலா, தன்னுடைய 3 குழந்தைகளுடன் சொந்த கிராமத்திலேயே வசித்து வந்தார். கணவனை பிரிந்திருந்த சுசீலாவுக்கு வினோத்ராம் என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. வினோத் லவுகாரியா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.

வினோத் ஒரு செல்போன் கடையை சொந்தமாக நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் இருவரும் பழகி வந்துள்ளனர். அதற்கு பிறகுதான் நெருக்கம் வந்துள்ளது. 2 பேரும் வீட்டில் அடிக்கடி சந்தித்து, ஜாலியாக இருந்து வந்துள்ளனர்.

அடிக்கடி வினோத்தை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்படித்தான் சம்பவத்தன்று இரவும் சுசீலா வீட்டிற்கு வினோத் வந்துள்ளார். 2 பேரும் வழக்கம்போல் கதவை சாத்திக் கொண்டனர். இரவு நேரம் என்பதால், வினோத் வந்ததை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று கணக்கு போட்டார் சுசீலா. ஆனால், ஊரே இதை பார்த்து கொண்டிருந்தது.

சம்பவத்தன்று இதை கண்ணெதிரே மறுபடியும் பார்த்துவிடவும் கொந்தளித்துவிட்டனர். அதற்கேற்றபடி, வெகுநேரமாகியும் கதவும் திறக்கப்படவில்லை. கணவன் வெளியூரில் இருக்கும்போது, இப்படி வேறொரு இளைஞர் வீட்டிற்குள் நுழைந்ததால் அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள், சுசீலா வீட்டு முன் திரண்டனர். கதவை தட்டவும், உள்ளே இருந்த ஜோடி வெலவெலத்து போய்விட்டது. பிறகு, வேறு வழியில்லாமல் சுசிலா கதவை திறந்து பார்த்தால், ஊரே நின்று கொண்டிருக்கிறது.

சுசீலாவையும், வினோத்தையும் தரதரவென இழுத்து வந்த கிராம மக்கள், அங்கிருந்த மின் கம்பத்தில் 2 பேரையும் கட்டி வைத்து அடித்தனர். அவர்களின் கைகளை துணியால் இறுக்கமாக கட்டிப்போட்டனர்.முழுக்க அந்த கட்டை அவிழ்க்கவே இல்லை. பொழுதுவிடியும்வரை, அந்த ஜோடி மின் கம்பத்திலேயே கட்டிவைக்கப்பட்டனர்.

வினோத் குடும்பத்தில் எல்லாரையுமே அங்கு வரவழைத்திருந்தனர் கிராம மக்கள். வினோத்தை பார்த்து ஆவேசமடைந்த குடும்பத்தினர், அந்த பெண்ணுக்கே வினோத்தை கல்யாணம் செய்து வைக்கும்படி சொன்னார்கள்.. இதையடுத்து, கிராம மக்களும், சுசீலாவுக்கும் வினோத்துக்கும் திருமணம் நடத்தி வைத்தனர். அங்கேயே மின் கம்பம் அடியிலேயே சுசீலாவுக்கு தாலி கட்டினார் வினோத்.

தாலி கட்டின கையோடு, உடனே கிராமத்தை விட்டு வெளியேறுங்கள் என்று அந்த ஊர்மக்கள் சத்தம் போட்டார்கள்.. பிறகு கள்ளக்காதல் ஜோடி இருவரும் அந்த கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்