பீகார்: அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முழு அடைப்பு போராட்டம்!

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகார் முழுவதும் இன்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

Update: 2022-06-18 03:59 GMT

பாட்னா,

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளை ஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பீகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் 2 ரெயில்களை தீயிட்டு கொளுத்தினர்.நேற்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. பீகாரில் அக்னிபத் போராட்டத்தின்போது, ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் இருந்து ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

புதிய ஆட்சேர்ப்பு கொள்கைக்கு எதிராக போராட்டங்கள் தொடர்வதால், அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகார் முழுவதும் இன்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆர்ஜேடியில் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது, ராஷ்திரிய ஜனதா தள தலைவர் ஜெகதானந்த் சிங் கூறுகையில், "குறுகிய கால ஆட்சேர்ப்பு திட்டம் தேசத்தின் இளைஞர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும்" என்றார்.

அதே போல, பாஜகவின் கூட்டாணியில் உள்ள மதச்சார்பற்ற இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியும், தேசத்தின் நலன் கருதி பந்த் அழைப்பை ஆதரிக்கும் என்று அதன் தலைவர் பீகார் முன்னாள் முதல் மந்திரி ஜிதன் ராம் மஞ்சி கூறினார். "எங்களது கட்சி வன்முறையை ஆதரிக்கவில்லை, ஆனால் இளைஞர்களின் நலன் கருதி பீகார் பந்த் அழைப்பை ஆதரிக்கும்" என்று ஜிதன் ராம் மஞ்சி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்