கோவா: பாஜகவில் இணையும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்...!

கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-09-14 06:25 GMT

பனாஜி,

கோவாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, 40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டசபையில் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இந்நிலையில், கோவா காங்கிரசில் மொத்தமுள்ள 10 எம்.எல்.ஏ.க்களில் இன்று 8 பேர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி, 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்தை இன்று சந்தித்தனர். கோவா முன்னாள் முதல்-மந்திரி திகம்பர் காமத் உள்பட 8 எம்.எல்.ஏ. காங்கிரசில் இருந்து விலகி இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவாவில் மொத்தமுள்ள 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 8 பேர் பாஜகவில் இணையும் பட்சத்தில் சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் 2 ஆக குறையும். இந்த சம்பவம் கோவா அரசியல் மட்டுமின்றி ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்