ரூ. 56 ஆயிரம் கோடி கடன் மோசடி வழக்கு - 5 பேர் கைது

பூஷன் இரும்பு நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது.

Update: 2024-01-12 09:55 GMT

டெல்லி,

1970ம் ஆண்டு பூஷன் இரும்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் பல்வேறு வங்கிகள் மூலம் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பூஷன் இரும்பு நிறுவனம் 56 ஆயிரம் கோடி ரூபாய் வரை பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி அந்த பணத்தை போலியாக தொடங்கிய கிளை நிறுவனங்களுக்கு திரும்பி அனுப்பியுள்ளது. மேலும், கடன் தொகையை செலுத்தாமல் திவால் ஆனதாக அறிவித்தது. இதையடுத்து, திவாலான பூஷன் இரும்பு நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது.

இதனிடையே, பூஷன் நிறுவனம் மீது வங்கிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.

இந்நிலையில், ரூ. 56 ஆயிரம் கோடி கடன் வாங்கி பணமோசடி செய்த வழக்கில் பூஷன் நிறுவனத்தின் முன்னாள் துணை கணக்காளர் பங்கஜ் குமார் அகர்வால், முன்னாள் தலைமை நிதி அதிகாரி நிதின், வங்கி பிரிவு துணைத்தலைவர் பங்கஜ் குமார் திவாரி உள்பட 5 பேரை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்