பத்ராவதி இரும்பாலை வருகிற 10-ந்தேதி முதல் செயல்படும் ராகவேந்திரா எம்.பி. தகவல்

மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் பத்ராவதி இரும்பாலை வருகிற 10-ந்தேதி முதல் செயல்படும் என்று ராகவேந்திரா எம்.பி. தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-01 18:45 GMT

சிவமொக்கா-

மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் பத்ராவதி இரும்பாலை வருகிற 10-ந்தேதி முதல் செயல்படும் என்று ராகவேந்திரா எம்.பி. தெரிவித்துள்ளார்.

பத்ராவதி இரும்பாலை

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் மத்திய அரசுக்கு சொந்தமான விஸ்வேசுவரய்யா இரும்பாலை செயல்பட்டு வருகிறது. கடும் நிதி நெருக்கடி காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த இரும்பாலை மூடப்பட்டது. இதனால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வேலையை இழந்து பாதிக்கப்பட்டனர். மேலும் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பத்ராவதி இரும்பாலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

ஆனாலும் இரும்பாலையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை. இதனால் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.

மத்திய அரசு ஒப்புதல்

மேலும் சிவமொக்கா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவேந்திராவும் இரும்பாலையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தார். இந்த நிலையில், தொழிலாளர்கள் மற்றும் ராகவேந்திரா எம்.பி.யின் கோரிக்கையை ஏற்று பத்ராவதி இரும்பாலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய மந்திரி ஜோதிராத்திய சிந்தியா ஆகியோர் பத்ராவதி இரும்பாலை செயல்படுவதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளனர்.

10-ந்தேதி முதல் செயல்படும்

இதுகுறித்து சிவமொக்கா நாடாளுமன்ற உறுப்பினர் ராகவேந்திரா நிருபர்களிடம் கூறுகையில், தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று பத்ராவதி இரும்பாலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. சைல் நிறுவனமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் பத்ராவதி இரும்பாலை வருகிற 10-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும்.

இந்த ெதாழிற்சாலை மீண்டும் செயல்பட இதுநாள் வரை பொறுமையாக இருந்து முழு ஒத்துழைப்பு வழங்கிய தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். பத்ராவதி இரும்பாலை மீண்டும் செயல்பட உள்ளதால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்