விபத்தில் பெஸ்காம் பெண் ஊழியர் சாவு
பெங்களூரு நாயண்டஹள்ளி அருகே விபத்தில் சிக்கி பெஸ்காம் பெண் ஊழியர் உயிரிழந்தார்.
பெங்களூரு:
பெங்களூரு நாயண்டஹள்ளி விநாயகா லே-அவுட்டில் வசித்து வந்தவர் மஞ்சுளா(வயது 40). இவர் பெஸ்காமில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று காலை தனது ஸ்கூட்டரில் நாயண்டஹள்ளியில் இருந்து சும்மனஹள்ளி நோக்கி மஞ்சுளா சென்று கொண்டு இருந்தார். நாகரபாவி பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த மஞ்சுளா தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பேடராயனபுரா போக்குவரத்து போலீசார்
வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.