ஆற்றில் குதித்து பெங்களூரு மாணவி தற்கொலை
காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆற்றில் குதித்து பெங்களூரு மாணவி தற்கொலை செய்துெகாண்டார்.
சிக்பள்ளாப்பூர்:-
பி.டெக் மாணவி
ஆந்திர மாநிலம் தர்மாவரம் பகுதியை சேர்ந்தவர் நிகாரிகா (வயது 22). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். இதற்காக அங்குள்ள பி.ஜி.யில் நிகாரிகா அறை எடுத்து தங்கி இருந்தார். இவர் ஆந்திர மாநிலம் தெனாலியை சேர்ந்த அஜய் என்ற வாலிபரை காதலித்து வந்தார். இந்த நிலையில் காதல் ஜோடி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி நிகாரிகா, பெங்களூருவில் இருந்து தர்மாவரம் நோக்கி கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்சில் புறப்பட்டு சென்றார். அப்போது காதலன் அஜயுடன் நிகாரிகா செல்போனில் பேசியப்படி சென்றார்.
தற்கொலை
அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நிகாரிகா, சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி அருகே அரசு பஸ்சில் இருந்து இறங்கினார். பின்னர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு ெசய்த அவர், இதுபற்றி தனது தோழிகள் மற்றும் சகோதரிக்கு போன் ெசய்து தெரிவித்தார். பின்னர் அங்குள்ள சித்ராவதி ஆற்றில் குதித்து நிகாரிகா தற்கொலை செய்துகொண்டார்.
மேலும் தற்கொலை ெசய்துகொள்வதற்கு முன்பு தான் ஆற்றில் குதித்த பகுதியை செல்போனில் படம் எடுத்து தனது தோழிகள் மற்றும் உறவினர்களுக்கு நிகாரிகா அனுப்பி வைத்திருந்தார்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து நிகாரிகாவின் பெற்றோர், விரைந்து வந்து பாகேபள்ளி போலீசில் தகவல் அளித்தனர். பின்னர் போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் விரைந்து வந்து சித்ராவதி ஆற்றில் நிகாரிகாவின் உடலை தேடினர். 2 நாட்கள் கழித்து அவரது உடலை போலீசார் மீட்டனர். மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காதலனுடன் ஏற்பட்ட தகராறில் நிகாரிகா ஆற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பாகேபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.