பெங்களூருவில் கல்லூரி மாணவி கத்தியால் பலமுறை குத்திக்கொலை...! நண்பர் வெறிச்செயல்

பெங்களூருவில் கல்லூரி மாணவியை அவரது நண்பரே கத்தியால் பலமுறை குத்திக்கொலை செய்துள்ளார்.

Update: 2023-01-03 06:18 GMT

கோப்புப்படம் 

பெங்களூரு,

பெங்களூருவின் புறநகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பிடெக் படித்துவரும் 19 வயது மாணவி லயா ஸ்மிதா. இவரது நண்பரான பவன் கல்யான் என்பவர் மற்றொரு கல்லூரியில் பிசிஏ படித்து வருகிறார். இருவரும் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில், பவன் கல்யான், மாணவி படிக்கும் பல்கலைக்கழகத்தில் வைத்து ஸ்மிதாவை பலமுறை கத்தியால் குத்தியுள்ளார். மேலும், தானும் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் தன்னையும் கத்தியால் குத்தியுள்ளார்.

இருவரும் ரத்த வெள்ளத்தில் பார்த்த மற்ற மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஸ்மிதா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தன்ர். காயம் அடைந்த பவன் கல்யான் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை ஏற்பட்டது என்றும், எதற்காக பவன் கல்யான், மாணவியை கத்தியால் குத்தி, தானும் தற்கொலை செய்ய முன்றார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலைக்கான காரணமோ அல்லது காரணமோ இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்த கல்லூரி மாணவர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்