மேற்கு வங்காள சட்டசபையில் நுபுர் சர்மாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்
தீர்மானத்தை கண்டித்து பா.ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கொல்கத்தா,
நபிகள் நாயகத்துக்கு எதிராக சர்ச்சை கருத்து தெரிவித்த பா.ஜனதா முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை கண்டித்து மேற்கு வங்காள சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதை சட்டசபை விவகார மந்திரி பார்த்தா சட்டர்ஜி தாக்கல் செய்தார். முன்கூட்டியே திட்டமிடப்படாமல் கொண்டுவரப்பட்டது. கோர்ட்டில் வழக்கு இருப்பதால், நுபுர் சர்மாவின் பெயர், தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை.
தீர்மானத்தின் மீது பேசிய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ''சில தலைவர்கள் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதங்களுக்கிடையே வெறுப்பை பரப்பும் மிகப்பெரிய சதியில் இது ஒரு அங்கம்'' என்று கூறினார்.
தீர்மானத்தை கண்டித்து பா.ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.