டெண்டர் விடுவதற்கு முன்பே,சிக்கமகளூருவில் சாலை சீரமைப்பு பணிகளை தொடங்கிய அரசியல் பிரமுகர்கள்

டெண்டர் விடுவதற்கு முன்பே சிக்கமகளூருவில் சாலை சீரமைப்பு பணிகளை தொடங்கிய அரசியல் பிரமுகர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2022-08-22 15:17 GMT

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி டவுன் பஞ்சாயத்து சார்பில் சாலை சீரமைப்பு பணி நடைபெற இருந்தது. இதற்காக டெண்டர் விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்பேரில் ஏராளமான ஒப்பந்ததாரர்கள் டெண்டரில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பங்களை கொடுத்திருந்தனர். நாளை(புதன்கிழமை) டெண்டர் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் டெண்டரை எடுக்காமலேயே சாலை சீரமைப்பு பணிகளை தொடங்கி உள்ளனர். இதற்கு ஒப்பந்ததாரர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

இதுபற்றி அறிந்த டவுன் பஞ்சாயத்து பா.ஜனதா தலைவர் ஹர்ஷவர்தன், டெண்டர் விடும் பணி முடியும் வரையில் யாரும் சாலை சீரமைப்பு பணிகளை தொடங்க கூடாது என்று கூறினார். இந்த சம்பவத்தால் சிருங்கேரி டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்