2024-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சந்திப்போம்; தேவேந்திர பட்னாவிஸ்

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சந்திப்போம் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

Update: 2022-11-06 12:09 GMT

மும்பை,

துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்டியா டுடேவின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பா.ஜனதா கட்சி வர இருக்கும் மாநகராட்சி தேர்தல், 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலை ஏக்நாத்ஷிண்டேவின் பாலாசாகிப் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும். நாங்கள் 2024 தேர்தலை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் எனது தலைமையில் சந்திப்போம்.

உத்தவ் தாக்கரே எங்களுக்கு துரோகம் செய்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தார். உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே ஏக்நாத் ஷிண்டேவை சரியாக நடத்தாததால் அவர் சிவசேனாவில் இருந்து விலக விரும்பினார். நாங்கள் அவரை வேண்டாம் என கூறவில்லை. நாங்கள் அவரை வரவேற்று, ஆதரவு அளித்து எங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்துக்கு பதிலடி கொடுத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்