முப்படைகளின் பாசறை திரும்பும் நிகழ்வு - டெல்லியில் தொடங்கியது

படைகள் பாசறை திரும்பும் நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Update: 2023-01-29 12:40 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் குடியரசு தின விழா கடந்த 26-ந்தேதி கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் போது டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் பங்கேற்ற படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு டெல்லியில் உள்ள விஜய் சவுக் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் படைகள் பாசறை திரும்பும் நிகழ்வை காண குவிந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் 29 வகையான இசை வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன. படைகள் பாசறை திரும்புதல் நிகழ்ச்சியில் 3,500 டிரோன்களுடன் சூரிய குடும்பம், புல்லட் ரெயில் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் டிரோன் ஷோ நடத்தப்பட உள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்