பசவராஜ் பொம்மையின் தாவோஸ் பயணத்திற்கு ரூ.9.23 கோடி செலவு

பசவராஜ் பொம்மையின் தாவோஸ் பயணத்திற்கு ரூ.9.23 கோடி செலவிட பட்டுள்ளது.

Update: 2022-08-02 16:34 GMT

பெங்களூரு:

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தாவோஸ் நகரில் சமீபத்தில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்றது. இதில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள் அஸ்வத் நாராயண், முருகேஷ் நிரானி மற்றும் உயர் அதிகாரிகள், அவர்களின் தனி செயலாளர்கள் என மொத்தம் 15 பேர் கலந்துகொண்டனர். அந்த மாநாடு மூலம் ரூ.60 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

இந்த நிலையில் தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் மரிலிங்கேகவுடா, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பசவராஜ் பொம்மையின் தாவோஸ் பயண செலவு விவரங்களை பெற்றுள்ளார். அதில் பசவராஜ் பொம்மை உள்பட 15 பேரின் செலவுகள் மற்றும் அங்கு போடப்பட்டு இருந்த கர்நாடக அரங்கு செலவுகள் என சேர்த்து மொத்தம் ரூ.9.23 கோடியை அரசு செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்