முந்தின காங்கிரஸ் அரசில் வங்கி துறை பேரழிவை சந்தித்தது: பிரதமர் மோடி

ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு நெருங்கிய நபர்கள், ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான கடன்களை பெற்று விட்டு ஒருபோதும் அதனை திருப்பி செலுத்துவதே இல்லை என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2023-07-22 06:35 GMT

புதுடெல்லி,

கோவாவில் நடந்து வரும் ஜி20 எரிசக்தி மந்திரிகளுக்கான கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இன்று பேசினார். அவர் காணொலி காட்சி வழியே பேசும்போது, வங்கி துறை வலிமையான நாடுகளில் ஒன்றாக இந்தியா இன்று உள்ளது. 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலைமை இல்லை. முந்தின அரசில், வங்கி துறையானது பெரிய அளவில் அழிவை சந்தித்தது.

ஆனால் நாம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை இன்று மேற்கொள்ள முடிகிறது. 9 ஆண்டுகளுக்கு முன்பு, மொபைல் போன் வங்கி சேவையானது 140 கோடி மக்களுக்கு இல்லை.

ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு நெருங்கிய நபர்கள், தொலைபேசி வழியே வங்கிகளுக்கு அழைப்பு விடுக்கின்றனர். அவர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த கடன்கள் ஒருபோதும் திருப்பி செலுத்தப்படுவதே இல்லை.

முந்தின அரசின் பெரிய ஊழல்களில் இந்த மொபைல் போன் வங்கி ஊழல் ஒன்றாகும். இந்த ஊழலால், வங்கி துறை முடக்கம் ஏற்பட்டது.

2014-ம் ஆண்டில், நமது வங்கி துறையை மீட்டெடுக்கும் முயற்சியை நாங்கள் தொடங்கினோம். நாட்டின் அரசு வங்கிகளின் மேலாண்மையை வலுப்படுத்தினோம்.

நாங்கள் பல்வேறு சிறிய வங்கிகளை இணைத்து, பெரிய வங்கிகளை உருவாக்கினோம். அரசு, திவால் சட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளது. இதனால், எந்த வங்கியாவது மூடப்பட்டால், அவர்களுக்கு குறைந்தபட்ச இழப்பே ஏற்படும் சாத்தியம் இருக்கும் என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்