விமான கண்காட்சி எதிரொலி: எலகங்கா மண்டலத்தில் 22 நாட்களுக்கு முதல் இறைச்சி விற்க தடை ; மாநகராட்சி உத்தரவு

விமான கண்காட்சி எதிரொலியாக எலகங்கா மண்டலத்தில் 22 நாட்களுக்கு முதல் இறைச்சி விற்க தடை விதிக்க பட்டுள்ளது.

Update: 2023-01-27 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு விமான கண்காட்சி நடந்திருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 5 நாட்கள் விமான கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், விமான கண்காட்சியையொட்டி எலகங்கா மண்டலத்தில் வருகிற 30-ந்தேதி முதல் பிப்ரவரி 20-ந்தேதி வரை 22 நாட்கள் இறைச்சி விற்பனை செய்ய தடை விதித்து பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும் ஓட்டல்கள், தாபாக்களிலும் அசைவ உணவு விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது. அனுமதியின்றி இறைச்சி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநகராட்சியின் இந்த உத்தரவால் இறைச்சிக்கடை உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்