அனுமதியின்றி ஒலிபெருக்கி, பட்டாசுகள் வெடிக்க தடை

சிவமொக்காவில் அனுமதியின்றி ஒலிபெருக்கி, பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக கலெக்டர் செல்வமணி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-04-04 15:26 GMT

சிவமொக்கா:-

தேர்தல் நடத்தை விதிமுறை

கர்நாடகத்தில் வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி மாநில முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளது. இந்நிலையில் சிவமொக்காவில் உள்ள விதிமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் செல்வமணி, சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

சிவமொக்காவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் அனுமதியின்றி பேனர் வைப்பது, ஒலி பெருக்கிகள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரசார வாகனங்களில் ஒலிபெருக்கி வைக்கவேண்டும் என்றால் அதற்கு முன் அனுமதி பெறவேண்டும். இதேபோல தேர்தலுக்கு முன்பு 2 நாள் தொடங்கி, தேர்தல் முடிந்த 2 நாள் வரைக்கும் எதற்கும் ஒலி பெருக்கியை பயன்படுத்த கூடாது. பொதுமக்கள் நடத்துபோது, அனுமதி பெற்றிருக்கவேண்டும். மேலும் அந்த பொது கூட்டங்களில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. மீறி பட்டாசுகள் வெடித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பணம், பரிசு பொருட்கள்.....

இதனை தேர்தல் அதிகாரிகள் சரியாக கவனிக்கவேண்டும். அலட்சியமாக அதிகாரிகள் செயல்படகூடாது. யாரேனும் அலட்சியமாக செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரம் என்பதால், வாக்காளர்களுக்கு, பணம் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதாக தகவல் வருகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சரியான ஆவணங்கள் இன்றி எந்த பொருட்கள் எடுத்து சென்றாலும், அவை பறிமுதல் செய்யப்படும். இதற்காக தேர்தல் அதிகாரிகள் நகர் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து, வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். ஆவணங்கள் இருந்து எடுத்து சென்றால், அதற்கு எந்த தடையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்