கர்நாடகத்தில் அடுத்த 3 மாதங்களில் 6 கோடி பேருக்கு ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு வசதி-மந்திரி சுதாகர் பேட்டி

கர்நாடகத்தில், அடுத்த 3 மாதங்களில் 6 கோடி பேருக்கு ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு வசதி செய்யப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

Update: 2022-07-20 17:09 GMT

பெங்களூரு: கர்நாடகத்தில், அடுத்த 3 மாதங்களில் 6 கோடி பேருக்கு ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு வசதி செய்யப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் திடீரென ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

புரட்சிகரமான திட்டம்

கர்நாடகத்தில் அடுத்த 3 மாதங்களில் 6 கோடி பேருக்கு ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு வசதி வழங்கப்படும். அவர்களுக்கு அந்த திட்ட அட்டை வழங்கப்படும். இது ஒரு புரட்சிகரமான திட்டம் ஆகும். அந்த அட்டையை பயன்படுத்தி ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற்று கொள்ளலாம். அந்த அட்டை பெற ரூ.30 செலவாகும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உடனடியாக ஆயுஸ்மான் அட்டை வழங்கப்படுகிறது.

கர்நாடகத்தில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பயோெமெட்ரிக் வருகை பதிவேடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 80 சதவீதம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள 20 சதவீத ஆஸ்பத்திரிகளிலும் அந்த நடைமுறை அமல்படுத்தப்படும்.

ரத்த அழுத்தம்

டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் தினமும் காலை, மதியம், மாலையில் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். ஆஸ்பத்திரிகள் தொற்று அல்லாத சர்க்கரை, ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களை கண்டறிய சோதனை நடத்த வேண்டும். அவ்வாறான நோய் உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்