வெளிநாட்டினர் படையெடுப்பால் ஆயுர்வேத மருத்துவம் தடைபட்டது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
ஆயுஷ் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சர்வதேச மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.
நாக்பூர்,
ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தை குறிக்கும் ஆயுஷ் அமைச்சகம் நாக்பூரில் 'ஆயுர்வேத பர்வ்' சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
ஆயுஷ் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'ஆயுர்வேத பர்வ்' சர்வதேச மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில் மத்திய ஆயுஷ் மந்திரி சர்பானந்தா சோனோவால், கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:-
அந்நியர்களின் படையெடுப்பால், ஆயுர்வேதத்தை மேம்படுத்துவது மக்களிடையே நிறுத்தப்பட்டது. ஆனால் ஆயுர்வேதத்திற்கு மீண்டும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஆயுர்வேதத்திற்கு உலக அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது ஆயுர்வேதம் தொடர்பான அறிவை விரிவுபடுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஆயுர்வேதத்தை நாம் எப்படி முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்? அதற்கான வழி யாதெனில், அனைவருக்கும் மலிவு மற்றும் எளிமையான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும், இதற்கு ஆயுர்வேதத்தை விட சிறந்த வழி எதுவுமில்லை.
ஆயுர்வேதத்தை அதன் தூய வடிவில் ஏற்றுக்கொள்ள வேண்டும், அது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார்.