மைனா் பெண்ணை பலாத்காரம் செய்தவன்: போலீசுக்கு பயந்து சிறுவன் தற்கொலை முயற்சி

மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த சிறுவன் போலீசுக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றான். அவனை, போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-29 15:36 GMT

மங்களூரு;

மைனர் பெண் பலாத்காரம்

உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா உப்புண்டபா பகுதியை சேர்ந்தவன் 17 வயது சிறுவன். இதேபோல் அதே பகுதியில் மைனர் பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி இரவு மைனர் பெண் வீட்டில் டி.வி பாா்த்து கொண்டிருந்தார்.

அவரது தாய் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்து சிறுவன், மைனர் பெண்ணை அவரது தாய்க்கு தெரியாமல் வீட்டில் இருந்து ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்து உள்ளார்.

போலீசில் புகார்

மேலும் இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து வீட்டின் வாசலில் விட்டு சென்றுள்ளார். ஆனாலும் மைனர் பெண் நடத்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கதறி அழுதபடி கூறியுள்ளாள்.

இதைகேட்டு மைனர் பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து உடனடியாக பைந்தூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.

தற்கொலை முயற்சி

இதை அறிந்த சிறுவன் போலீசுக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றான். அவனை, அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு பைந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பைந்தூர் போலீசார், ஆஸ்பத்திரிக்கு சென்று சிறுவனை கைது செய்தனர். மேலும் போலீசார்,சிறுவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்