டிஜிட்டல் வங்கி சேவை குறித்து விழிப்புணர்வு பெங்களூருவில் தபால்துறை வார அனுசரிப்பு

டிஜிட்டல் வங்கி சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்பட்ட பெங்களூருவில் தபால்துறை வார அனுசரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-10-10 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு மண்டல அஞ்சல் துறை ஜெனரல் எல்.கே.தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தபால் துறை வார அனுசரிப்பு நிகழ்ச்சி 9-ந் தேதி தொடங்கியுள்ளது. இது வருகிற 13-ந் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த அஞ்சல் வாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடுவது, தபால் துறையில் நடையில் உள்ள திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிப்பது, சிறு சேமிப்பு திட்ட கணக்குகளை தொடங்குவது, தபால் காப்பீடு, டிஜிட்டல் வங்கி சேவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு விஷயங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு சுகன்யா சம்ருத் திட்ட கணக்குகளை தொடங்குவது குறித்து மக்களிடம் எடுத்து கூறப்படும். ஆதார் பதிவு பணிகளை மேலும் தீவிரப்படுத்துவோம். தபால் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

இவ்வாறு எல்.கே.தாஸ் கூறினார்.

மேலும் செய்திகள்