பெங்களூரு மெட்ரோ நிர்வாகத்திற்கு விருது
பெங்களூரு மெட்ரோ நிர்வாகத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் வாகன போக்குவரத்தை குறைக்கவும், பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதை தடுக்கவும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூருவில் தற்போது 2-வது கட்ட மெட்ரோ பணிகள் விரைவாக நடந்து வருகிறது. நாளுக்கு நாள் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. சாலை போக்குவரத்தை காட்டிலும் மெட்ரோ ரெயில்களில் செல்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் பெங்களூரு மெட்ரோ நிர்வாகத்திற்கு விருது ஒன்று வழங்கப்பட்டது. நிர்வாக பிரிவில் பெங்களூரு மெட்ரோ நிர்வாகத்திற்கு 'சிலிக்கான் பள்ளத்தாக்கின் சிறந்த பொது போக்குவரத்து விருது' வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் புறநகர் சாலை போக்குவரத்து இயக்ககத்திற்கு தொழிற்சாலை பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது.