மேற்கு வங்காளத்தில் பஸ் மீது ஆட்டோ மோதி 9 பேர் பலி

மேற்கு வங்காளத்தின் ஆட்டோவும், அரசு பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2022-08-09 22:57 GMT

சுரி:

மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் நேற்று நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவும், அரசு பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது. ராம்புர்கட் அருகே மல்லர்புரம் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது.

ஆட்டோவில் அதிகம் பேர் பயணித்தபோது பஸ் உடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோவில் சென்ற டிரைவர் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் விபத்து குறித்து பீர்பூம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நாகேந்திர நாத் திரிபாதி தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றானர்.

Tags:    

மேலும் செய்திகள்