பீகாரில் கொடூரம்; பெற்றோரை சிறை வைத்து, கர்ப்பிணியான 16 வயது சிறுமியை எரித்து, கொன்ற காதலன்

பீகாரில் கர்ப்பிணியான 16 வயது சிறுமியை எரித்து, கொன்றதுடன் சிறுமியின் பெற்றோரை காதலன் வீட்டு சிறையில் வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2023-03-19 04:09 GMT



பாட்னா,


பீகாரின் நவாடா மாவட்டத்தில் ரஜாவ்லி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் வசித்து வந்த 16 வயது சிறுமி, வாலிபர் ஒருவருடன் காதலில் இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில், சிறுமி கர்ப்பிணியாகி உள்ளார்.

இதுபற்றி அறிந்ததும் அந்த வாலிபர் அவரை தவிர்க்க தொடங்கி உள்ளார். எனினும், வாலிபரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிறுமி கேட்டு உள்ளார். ஆனால் அதற்கு அவரும், அவரது குடும்பத்தினரும் மறுத்து உள்ளனர்.

இந்நிலையில், காதலி கர்ப்பிணியான நிலையில், திருமணத்திற்கு நெருக்கடி கொடுத்ததில் காதலன் ஆத்திரமடைந்து உள்ளார். இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், காதலன் சிறுமியை தீ வைத்து, எரித்து கொலை செய்து உள்ளார்.

அதன்பின்பு வாலிபரின் பெற்றோர், சிறுமியின் பெற்றோரை பிடித்து, வீட்டு சிறையில் வைத்து உள்ளனர். எனினும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறி, வாலிபரிடம் இருந்து அவர்கள் தப்பி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து உள்ளனர். சிறுமி படுகொலை பற்றி போலீசார் புகாரை பெற்று விசாரணை நடத்தினர்.

4 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவானது. அந்த புகாரில், 16 வயது சிறுமி வாலிபருடன் காதலில் இருந்த விவரங்களை சிறுமியின் தந்தை ஒப்பு கொண்டு உள்ளார். எனினும், அதுபற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்களின் மகள் கர்ப்பிணியான பின்னரே அதுபற்றி தெரிந்து, அதிர்ச்சியடைந்து உள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்