வயநாட்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து: 8 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழப்பு
விபத்தில் பலியானவர்கள் அனைவரும் வயநாட்டை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
வயநாடு
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தாளப்புழா கண்ணோட் மலை அருகே தோட்டமொன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப் 25 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இதில் 8 பேர் பெண்கள்.
காயமடைந்த 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்கள் மானந்தவாடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் பலியானவர்கள் அனைவரும் வயநாட்டை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. ஜிப்பில் டிரைவர் உள்பட மொத்தம் 13 பேர் பயணம் செய்து உள்ளனர்.