குடியிருப்பு பகுதியில் வாயு கசிவு - 24 பேர் பலி

குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட வாயு கசிவில் 24 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-07-05 23:06 GMT

ஜோகனர்ஸ்பர்க்,

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணம் போக்ஸ்பர்க் நகரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு தற்காலிக குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த குடியிருப்பு பகுதியில் இன்று வாயு கசிவு ஏற்பட்டது. இந்த வாயுவை சுவாதித்த  24  பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  வாயு கசிவுக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்