தாவணகெரே அருகே கணகட்டேயில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்

தாவணகெரே அருகே கணகட்டேயில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-29 19:00 GMT

சிக்கமகளூரு;


தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா கண்கட்டேவில் உள்ள சுங்கச்சாவடியில் வேலை பார்த்து வந்த 40 பேரை தனியார் நிறுவனம் முன்னறிவிப்பு இன்றி பணி நீக்கம் செய்தது. இதை கண்டித்த ஊழியர்கள், மீண்டும் தங்களை பணியில் சேர்க்கும்படி தனியார் நிறுவனத்திடம் முறையிட்டனர்.

ஆனால் தனியார் நிறுவனம் இவர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில் அந்த தனியார் நிறுவன ஊழியர்கள் சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து ஜகலூர் தாலுகா கணகட்டே தேசிய நெடுஞ்சாலை 40-ல் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த சுங்கச்சாவடியை நிர்வகித்து வரும் தனியார் நிறுவன மேலாளர் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மீண்டும் அவர்களை வேலையில் சேர்ப்பதாக கூறினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் போக்குவரத்து நெரிசல் சீரானது.

மேலும் செய்திகள்