ஆண்டர்சன்பேட்டை பஸ் நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக திறக்காமல் இருக்கும் ராஜீவ்காந்தி சிலை

ஆண்டர்சன்பேட்டை பஸ் நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக திறக்காமல் இருக்கும் ராஜீவ்காந்தி சிலையை திறக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2022-09-24 18:45 GMT

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டையில் நகரசபை பஸ் நிலையம் தங்கவயல் நகரசபை சார்பில் அமைக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலைய மையப்பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் சிலை வைக்கப்பட்டு கல்வெட்டுகள் பொருத்தப்பட்டது. அத்துடன் அப்போது விரைவில் சிலை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆண்டர்சன்பேட்டை பகுதியை சேர்ந்த காங்கிரசார் மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால் சிலை வைத்து 20 ஆண்டுகள் ஆகியும் பல்வேறு காரணங்களால் இதுவரை ராஜீவ்காந்தியின் சிலை திறக்கப்படவில்லை. இதனால் சிலையை பாதுகாக்க அதனை சுற்றி துணிகள் கட்டப்பட்டிருந்தது. இதற்கான காரணம் சரிவர தெரியவில்லை. இதுபற்றி காரணத்தை அறிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களிடம் விளக்கம் கேட்க முயன்றபோது யாரும் பதில் கூற விரும்பவில்லை.

\தற்போது அந்த இடம் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களை பழுது பார்க்கும் இடமாக மாறி உள்ளது.

மேலும் செய்திகள்