கர்நாடக 15-வது சட்டசபையின் கடைசி கூட்டத்தொடர் நிறைவடைந்தது

கர்நாடக 15-வது சட்டசபையின் கடைசி கூட்டத்தொடர் நிறைவடைந்தது.

Update: 2023-02-24 20:36 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையின் கூட்டு, பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் இருசபைகளின் கூட்டுக் கூட்டத்தில் கவா்னர் தாவர்சந்த் கெலாட் கலந்துகொண்டு உரையாற்றினார். அதன் பிறகு 17-ந் தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் மீது விவாதம் நடைபெற்றது. அதன் பிறகு அந்த பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் கடைசி நாளான நேற்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதையொட்டி இறுதி உரையாற்றினார். தனது அரசியல் வாழ்க்கை பயணம் குறித்து அவர் உருக்கமாக பேசினார்.

அதைத்தொடர்ந்து சபாநாயகர் காகேரி, இறுதியாக சில வார்த்தைகளை பேசினார். அப்போது அவா் நாக்கு தழுதழுத்து பேசினார். பேச முடியாமல் ஒரு நிமிடம் மவுனமாக இருந்தார். அதன் பிறகு உறுப்பினர்களிடம் இருந்து பிரியா விடை பெற்று, சபையை காலவரையறை இன்றி ஒத்திவைத்தார். அத்துடன் 15-வது சட்டசபையின் கடைசி கூட்டத்தொடர் நிறைவடைந்தது. அடுத்து வருகிற மே மாதம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்களை உள்ளடக்கிய 16-வது சட்டசபை கூட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டசபை தேர்தல் நெருங்குவதால், இந்த கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.க்களின் வருகை மிக குறைவாகவே இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்