முஸ்லிம்கள் உள்பட ஆறு மதத்தினருக்கு சிறுபான்மையினர் சான்றிதழ் வழங்க அசாம் அரசு முடிவு!

அசாம் சிறுபான்மையினர் மேம்பாட்டு வாரியம் அரசுக்கு அனுப்பிய முன்மொழிவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது

Update: 2022-05-29 11:51 GMT

கவுகாத்தி,

இந்துக்கள் அல்லாத பிற ஆறு மத சமூகங்களுக்கு சிறுபான்மை சான்றிதழ் வழங்க அசாம் அரசு முடிவு செய்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி கேசப் மஹந்தா இன்று தெரிவித்தார்.

அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் கவுகாத்தியில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய மதத்தை சேர்ந்த மக்களுக்கு சிறுபான்மைச் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அசாம் சிறுபான்மையினர் மேம்பாட்டு வாரியம் மாநில அரசுக்கு அனுப்பிய முன்மொழிவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்