அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு

அசாமில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2022-06-18 17:27 GMT

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் 32 மாவட்டங்களில் மொத்தம் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பல பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீண்டும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 1.56 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. வெள்ளபாதிப்பு தொடர்பாக மாநில முதல்-மந்திரியுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.    

Tags:    

மேலும் செய்திகள்