அசாமில் தொடரும் வெள்ளம் - 7 லட்சம் பேர் பாதிப்பு
அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கவுகாத்தி,
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவால் இதுவரை 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.