அசாம்: ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது
ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
திஸ்பூர்,
அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பகர்சால் என்ற பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சுமித்ரா தாஸ் மற்றும் சபீக்குர் இஸ்லாம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.