அசாம்: வடக்கு கச்சார் ஹில்ஸ் தன்னாட்சி கவுன்சிலில் ஆட்சியை தக்கவைக்கிறது பாஜக..!
இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டது
கவுகாத்தி,
அசாம் மாநிலம் வடக்கு கச்சார் ஹில்ஸ் தன்னாட்சி கவுன்சிலின் 28 தொகுதிகளுக்கு கடந்த 8-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 28 இடங்களில் ஏற்கனவே 6 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.இதனால் மற்ற 22 இடங்களுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 85.78 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இந்த நிலையில் , இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் தற்போது வரை பாஜக 13 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது
மேலும் மற்ற இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் நார்த் கச்சார் ஹில்ஸ் தன்னாட்சி கவுன்சிலில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது.