வாகனம் செல்ல வசதி இல்லாததால் நோயாளியை மலைப்பாதையில் மூங்கிலில் துணி கட்டி சுமந்து சென்ற அவலம்...!

கேரள மாநிலம் முக்திகுளம் என்ற மலை கிராமத்தில், வாகனங்கள் செல்லும் வசதி இல்லாததால், நோயாளி ஒருவரை மக்கள் மூங்கிலில் துணி கட்டி சுமந்து சென்றனர்.

Update: 2022-08-09 03:58 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் முக்திக்குளம் எனும் ஒரு கிராமம் உள்ளது. இந்த பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால் இந்த கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், கல்வி கற்கவும், மருத்துவமனை செல்லவும் ஆற்றை கடந்து செல்லும் சிரமமான நிலையும் உள்ளது.

இந்த நிலையில், முக்திக்குளம் கிராமத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி லீலா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது வீட்டில் கீழே விழுந்து முதுகெலும்பு பாதிப்புக்கு உள்ளானார். அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர்.

அந்த கிராமத்திற்கு வாகனங்கள் செல்லும் வசதி இல்லை என்பதால் லீலாவை, அப்பகுதி கிராம மக்கள், மூங்கிலில் துணி கட்டி கொட்டும் மழையில் நனைந்தபடி ஆற்றை கடந்து சுமந்து சென்றனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

மேலும் வாகனங்கள் செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்