நாட்டு நன்மைக்காக டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் சிறப்பு தியானம்..!

நாட்டு நன்மைக்காக டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் சிறப்பு தியானம் செய்தார்.

Update: 2023-03-08 22:51 GMT

புதுடெல்லி,

நாட்டின் நன்மைக்காக ஹோலி பண்டிகையின்போது (நேற்று) ஒரு நாள் முழுவதும் சிறப்பு பூஜை, தியானம், பிரார்த்தனை என ஈடுபடப்போவதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) அறிவித்திருந்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, "பிரதமர் மோடி நாட்டுக்கு நல்ல பணி ஆற்றுவோரை சிறையில் தள்ளுகிறார். நாட்டைக் கொள்ளையடிப்போரைத் தழுவுகிறார். ஹோலி பண்டிகை நாளில் நான் நாட்டின் நன்மைக்காக தியானம் செய்வேன். பிரார்த்தனை செய்வேன். பிரதமர் மோடி சரியான காரியத்தை செய்யவில்லை என்று நீங்களும் கருதினால், நீங்களும் ஹோலி கொண்டாடிவிட்டு நாட்டு நன்மைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என தெரிவித்தார்.

அதன்படி நேற்று அவர் ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு பூஜை செய்தார். தொடர்ந்து அவர் தியானம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்