7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் பெங்களூருவில் சிக்கினார்

பஞ்சாப்பில் நடந்த கொலை வழக்கில் ஏழு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் பெங்களூருவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-24 18:45 GMT

பெங்களூரு:

பஞ்சாப் மாநிலம் பரிகோட் மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு படுகொலை சம்பவம் ஒன்று அரங்கேறியது. இந்த சம்பவத்தை பஞ்சாப் சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரித்து வந்தது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக போலீசார் பஞ்சாப்பை சேர்ந்த சந்தீப், பிரதீப் மற்றும் ஹர்சா ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வந்தது. இதையடுத்து சந்தீப் போலீசிடம் சிக்காமல் இருப்பதற்கு தலைமறைவானார். இதையடுத்து அவரை சிறப்பு விசாரணை அமைப்பினர் தேடி வந்தனர். இந்த நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு செல்வதற்காக சந்தீப் காத்திருந்தார். அப்போது அவர் தனது பஸ்போர்ட்டை, விமான ஊழியர்களிடம் காட்டியபோது, அவர் மீது பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.


இதையடுத்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகள், பஞ்சாப் போலீசார் மற்றும் சிறப்பு புலனாய்வு அமைப்பினருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் பஞ்சாப் போலீசார் மற்றும் அதிகாரிகள் பெங்களூருவுக்கு விரைந்தனர். அவர்கள் படுகொலை வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சந்தீப்பை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்