வீடு புகுந்து தனியார் நிறுவன ஊழியரிடம் நகைகள் கொள்ளை

விசா ஆய்வு செய்வதாக கூறி, வீடு புகுந்து தனியார் நிறுவன ஊழியரிடம் நகைகளை 3 பேர் கொள்ளையடித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-24 18:45 GMT

பெங்களூரு:

விசா ஆய்வு செய்வதாக கூறி, வீடு புகுந்து தனியார் நிறுவன ஊழியரிடம் நகைகளை 3 பேர் கொள்ளையடித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அடையாள அட்டைகள்

பெங்களூரு குமாரசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் முரளிதர். இவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். இந்த நிலையில் அவரது வீட்டிற்கு மர்மநபர்கள் சிலர் வந்தனர். அவர்கள் தங்களை விசா ஆய்வு செய்யும் அதிகாரிகள் என கூறி அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர், முரளிதரின் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

அவரும் வீட்டில் இருந்த அடையாள அட்டைகளை எடுத்து வந்து அவர்களிடம் கொடுத்தார். அந்த சமயத்தில் அந்த கும்பல், முரளிதரரை தாக்கினர். பின்னர், அவரது கை, கால்களை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து முரளிதர் குமாரசாமி லே-அவுட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

இந்த நிலையில் விசாரணையின்பேரில் சுவரூப், ஆத்மானந்த், சலிம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் சுவரூப், அந்த பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வந்ததும், அவர் தனது கூட்டாளிகளான சலிம் மற்றும் ஆத்மானந்த் ஆகியோருடன் சேர்ந்து முரளிதர் வீட்டில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதேபோல் அவர்கள் பல்வேறு இடங்களில் நூதன முறையில் நகை கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒட்டுமொத்தமாக ரூ.13 லட்சம் மதிப்பிலான நகைகளை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்