டாக்டர் வீட்டில் திருடியவர் கைது

சாகர் அருகே டாக்டர் வீட்டில் திருடியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.57 லட்சம் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-20 18:45 GMT

சிவமொக்கா:

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவை சேர்ந்தவர் டாக்டர் மோகன். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவை திறந்து, அதில் வைக்கப்பட்டிருந்த நகைகளை திருடி சென்றனர். இதுகுறித்து மோகன் சாகர் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து ரூ.57 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கத்தை திருடி சென்றதாக கூறப்பட்டது. இதுகுறித்து சாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான திருடனை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த திருட்டு தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.


விசாரணையில் அவர் பெங்களூரு பன்னரகட்டாவை சேர்ந்த டேவிட்(வயது 37) என்று தெரியவந்தது. இதற்கு முன்பு இவர் கோவிந்த்ராஜ்நகர் மற்றும் உத்தர கன்னடா மாவட்டமான குமட்டா, ஒன்னாவரா ஆகிய இடங்களில் திருடி இருப்பதாக தெரியவந்தது. சாகரில் உள்ள டாக்டர் மோகன் வீட்டிலும் திருடியது இவர்தான் என்று தெரியவந்துள்ளது. இவரிடம் இருந்து டாக்டர் வீட்டில் திருடிய ரூ.57 லட்சம் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை திருட்டு நடந்த இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்