மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது

ஹாசனில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-12 22:09 GMT

ஹாசன்:

ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா இப்பட்டு கிராமத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு நரேந்திரா என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு நரேந்திரா பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதேபோல், கடந்த திங்கட்கிழமையும் மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, வீட்டுக்கு வந்து தனது உறவினர்களிடம் கூறி கதறி அழுதுள்ளாள். இதுகுறித்து அவரது குடும்பத்தினர், பேளூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் பள்ளிக்கு சென்று, ஆசிரியர் நரேந்திராவை கைது செய்தனர். மேலும், தனியார் பள்ளி நிர்வாகம் அவரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்