கர்நாடகத்தில் 75 சிவில் நீதிபதிகள் நியமனம்- மாநில அரசு உத்தரவு
கர்நாடகத்தில் 75 சிவில் நீதிபதிகளை நியமித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் காலியாக இருக்கும் சிவில் நீதிபதிகளை நியமிக்க அரசு முடிவு செய்திருந்தது. அதே நேரத்தில் சிவில் நீதிபதிகள் நியமனத்திற்கு கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதியே கர்நாடக ஐகோர்ட்டும் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் சிவில் நீதிபதிகளை நியமிப்பதில் அரசு காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், கர்நாடகத்தில் புதிதாக 75 சிவில் நீதிபதிகளை நியமித்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கவர்னர் தாவர்சந்த் கெலாட்டின் அனுமதியுடன், இந்த உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிவில் நீதிபதிகள் 2 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள் என்று கர்நாடக சட்டத்துறை முதன்மை செயலாளர் வெங்கடேஷ் நாயக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.