கூடுதலாக 2 நீதிபதிகள் நியமனம்
கர்நாடக ஐகோர்ட்டுக்கு கூடுதலாக 2 நீதிபதிகள் நியமனம் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:-
கர்நாடக ஐகோர்ட்டுக்கு கூடுதலாக 2 நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கர்நாடக ஐகோர்ட்டுக்கு கூடுதலாக நீதிபதிகளான ராமசந்திரா தத்தாத்ராய் குத்தார், வெங்கடேஷ் நாயக் ஆகிய 2 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ராமசந்திரா பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நீதிபதியாக பதவி வகித்து வந்தார். பெங்களூரு புறநகர் மாவட்ட செசன்சு கோாட்டு நீதிபதியாக வெங்கடேஷ் நாயக் இருந்து வந்தார். அவர்கள் 2 பேரும் கர்நாடக ஐகேர்ட்டு கூடுதலாக நீதிபதிகளாகி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் நீதிபதிகளான ராமசந்திரா தத்தாத்ராய் குத்தார் மற்றும் வெங்கடேஷ் நாயக்கை கர்நாடக ஐகோர்ட்டுக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமித்து மத்திய அரசுக்கு சிபாரிசு செய்திருந்தது. இதையடுத்து, மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.