ஆந்திராவில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயர்!
ஆந்திர மாநிலத்தில் ஒரு மாவட்டத்துக்கு டாக்டர் அம்பேத்கரின் பெயரை சூட்ட அம்மாநில மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
அமராவதி,
ஆந்திர மாநிலத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒரு மாவட்டத்துக்கு டாக்டர் அம்பேத்கரின் பெயரை சூட்ட அம்மாநில மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திர பிரதேசம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட 'கோனசீமா' என்ற மாவட்டத்துக்கு அண்ணல் அம்பேத்கர் பெயரை சூட்டும் அறிவிப்பை கடந்த மே மாதம் மாநில அரசு வெளியிட்டது.
இதனை எதிர்த்து கோனசீமா மந்திரிகள், எம்.எல்.ஏக்களின் வீடுகளுக்கு தீயிட்டும் சேதப்படுத்தியும் சாதனா சமிதி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். தொடர்ந்து வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் "டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம்" என்ற பெயர் மாற்றத்துக்கு முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.