உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவு: மேலும் ஒரு எம்.பி அணி தாவினார்

கஜனன் கீர்த்திகர் எம்.பி. உத்தவ் சிவசேனாவில் இருந்து ஷிண்டே அணிக்கு தாவி உள்ளார்.

Update: 2022-11-12 12:57 GMT

மும்பை

சிவசேனா கடந்த ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது. அந்த கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன், பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சியை பிடித்தார். இதேபோல சிவசேனாவில் உள்ள 19 எம்.பி.க்களில் 12 பேரும் ஷிண்டே அணிக்கு சென்றனர்.

இந்தநிலையில் மும்பை வடமேற்கு ெதாகுதி எம்.பி. கஜனன் கீர்த்திகர் ஷிண்டே அணிக்கு தாவி உள்ளார். அவர் நேற்று முன் தினம் இரவு வர்ஷா பங்களாவில் முதல்-மந்திரி ஏக்நாத்ஷிண்டே முன்னிலையில் அந்த அணியில் இணைந்தார். சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கஜனன் கீர்த்திகரை அவரது வீட்டில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சந்தித்தார். அப்போது முதல் அவர் ஷிண்டே அணியுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில் அவர் அதிகாரப்பூர்வமாக ஷிண்டே அணியில் இணைந்து உள்ளார்.

ஷிண்டே அணியில் இணைந்ததை அடுத்து உத்தவ் தாக்கரே சிவசேனாவில் இருந்து கஜனன் கீர்த்திகர் நீக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு எம்.பி. ஷிண்டே அணிக்கு சென்றது உத்தவ் தாக்கரே அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அதேநேரத்தில் கஜனன் கீர்த்திகரின் மகனும், யுவசேனா பிரமுகருமான அமோல் தொடர்ந்து உத்தவ் தாக்கரே சிவசேனாவில் நீடிப்பதாக தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்